ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது

ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

09 Jun, 2016 | 6:24 pm

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது பிரேரணைக்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 145 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், பிரேரணை 94 மேலதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

28 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பின்போது சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்