மேலும் ஆறு இந்திய மீனவர்கள் கைது

மேலும் ஆறு இந்திய மீனவர்கள் கைது

மேலும் ஆறு இந்திய மீனவர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2016 | 1:24 pm

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 இந்திய மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை தலைமன்னார் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்

அத்துடன் அவர்கள் மீன்டிபிடியில் ஈடுப்பட்ட ட்ரோலர் படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த இந்திய மீனவர்கள் தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடற்படைப் பேச்சாளர் கூறினார்.

ஏற்கனவே இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 15 மீனவர்களையும் அவர்களின் 91 படகுகளையும் விடுவிக்குமாறு கோரி நேற்று முன்தினம் தமிழக முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக சிறைபிடிக்கப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், தமிழக மீனவர்கள் அவர்களின் பாரம்பரிய பகுதியில் அமைதியாக மீன்பிடிப்பதை உறுதி செய்யும் வகையில் தூதரக மட்டத்திலான நடவடிக்கையை எடுக்க வெளிவிவாகர அமைச்சிற்கு அறிவுறுத்துமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.

மீனவர் விவகாரம் குறித்து கடந்த இரண்டு வாரங்களில் மூன்று தடவைகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்