மரியா ஷரபோவாவிற்கு இருவருட போட்டித்தடை

மரியா ஷரபோவாவிற்கு இருவருட போட்டித்தடை

மரியா ஷரபோவாவிற்கு இருவருட போட்டித்தடை

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2016 | 8:04 am

உலகின் முன்னணி டெனிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவாவிற்கு போட்டிகளில் பங்கேற்பதற்கு சர்வதேச டெனிஸ் சங்கம் தடை விதித்துள்ளது.

ஊக்கமருந்து பாவனை தொடர்பான சோதனையில் தோல்வியடைந்ததையடுத்தே அவருக்கு இருவருட போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற அவுஸ்திரேலிய டெனிஸ் தொடரின் பின்னர் மரியா ஷரபோவா தடையை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மருந்து இதய நோய்க்கு பயன்படுத்தப்படுவது எனவும் 2006 ஆம் ஆண்டு முதல் குறித்த மருந்தினை தனது உடல் நிலையை கருத்திற் கொண்டு பயன்படுத்தி வருவதாகவும் 29 வயதான மரியா ஷரபோவா தெரிவித்திருந்தார்.

5 தடவைகள் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள மரிய ஷரபோவா குறித்த தீர்ப்பு ஏற்றுக் கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்