மக்களின் எதிர்ப்பு காரணமாக கொழும்பு – அவிஸ்ஸாவெல பிரதான வீதி மூடப்பட்டுள்ளது

மக்களின் எதிர்ப்பு காரணமாக கொழும்பு – அவிஸ்ஸாவெல பிரதான வீதி மூடப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

09 Jun, 2016 | 7:33 pm

மக்களின் எதிர்ப்பு காரணமாக சாலாவ இராணுவ முகாமிற்கு அருகில் கொழும்பு – அவிஸ்ஸாவெல பிரதான வீதி மூடப்பட்டுள்ளது.

இதனால் குறுக்கு வீதிகள் ஊடாகவே வாகனங்கள் பயணிக்கின்றன.

வீடுகளை சுத்திகரிக்கும் பணிகளும் மின் கட்டமைப்புக்களை சீராக்கும் பணிகளும் இன்று இடம்பெற்றன.

இதேவேளை, சாலாவ இராணுவ முகாம் தொடர்பில் முன்னெடுக்கவுள்ள அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர பின்வருமாறு தெளிவுபடுத்தினார்.

[quote]அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு மீண்டும் இந்த இடத்தில் முகாம் கட்டியெழுப்பப்படும். முகாம் ஒன்று இல்லாமல் போனமையினால் அந்த இடத்தில் இருந்து இராணுவம் வெளியேறாது. எனினும், இதுபோன்று தோட்டாக்களைக் களஞ்சியப்படுத்தி வைக்கும் களஞ்சியசாலை மீண்டும் அமைக்கப்படாது. இந்த முகாமை உரிய முறையில் நடத்திச் செல்வதற்கான நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளோம்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்