நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று விவாதத்திற்கு

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று விவாதத்திற்கு

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று விவாதத்திற்கு

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2016 | 8:29 am

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை, இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

குறித்த பிரேரணை மீதான விவாதம் நேற்று இடம்பெறவிருந்த போதிலும் பாராளுமன்றத்தின் ஒலி வாங்கிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சபை நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

பிரதமரிடம் வாய்மூலம் கேள்விகளை கேட்பதற்கான சந்தர்ப்பத்தில், எதிர்கட்சியின் பிரதம கொரடா அனுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பிரதமர் பதிலளிக்க ஆயத்தமானபோது ஒலிவாங்கி செயலிழந்தது.

இதனையடுத்து சபை நடவடிக்கைகள் பிற்பகல் 1.25 அளவில் சிறிது நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டதுடன், பிற்பகல் 2.40 க்கு மீண்டும் ஆரம்பமாகின.

ஆயினும், ஒலிவாங்கி கட்டமைப்பு தொடர்ந்தும் செயலிழந்து காணப்பட்டமையால், சபை நடவடிக்கைகளை இன்று காலை வரை ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்திருந்தார்.

இதன்பிரகாரம் இன்று காலை 9.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்