தாஜூடினின் கொலை தொடர்பில் கைதான அநுர சேனாநாயக்க தொடர்ந்து விளக்கமறியலில்

தாஜூடினின் கொலை தொடர்பில் கைதான அநுர சேனாநாயக்க தொடர்ந்து விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2016 | 1:05 pm

ரக்பி வீரர் வசிம் தாஜூடினின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றததில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை ரக்பி வீரர் வசிம் தாஜூடினின் கொலை சம்பவம் தொடர்பிலான சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாரஹேன்பிட்டி போக்குவரத்து பிரிவின் முன்னாள் நிலைய பொறுப்பதுகாரி சுமத் குமாரவிற்கு கருத்து தெரிவிப்பதற்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

அது தொடர்பில் மீண்டும் சிந்தித்து பார்க்குமாறு நீதிமன்றம் சுமத் குமாரவிற்கு அறிவித்தது.

அதன்படி விருப்பத்தின் பிரகாரம் முன்வந்தால் நாளை விசேட கருத்தை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கும் முடியுமென கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் சந்தேநபருக்கு தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்