சாலாவ தீ விபத்தினால் சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

சாலாவ தீ விபத்தினால் சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

சாலாவ தீ விபத்தினால் சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2016 | 8:37 am

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீயினால் சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

நேற்று முதல் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

வீடுகளை புனரமைக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு அவற்றை விரைவில் மக்களுக்கு கையளிக்க எண்ணியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் தற்போது பாதுகாப்பு வலயங்களாக மாற்றப்பட்டுள்ளதாக மேற்கு பாதுகாப்புப் படையின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

குறித்த பகுதியில் காணப்படும் வெடிபொருட்களின் பாகங்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகாமிலிருந்து 500 மீற்றர் சுற்றுவட்டத்திலுள்ள மக்கள் நேற்றைய தினம் இராணுவத்தினரின் உதவியுடன் தமது வீடுகளுக்கு அவற்றின் நிலை தொடர்பில் பார்வையிட்டு மீண்டும் முகாம்களுக்கு சென்றதாகவும் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க கூறினார்.

இராணுவ முகாமில் ஏற்பட்ட தீச்சம்பவத்தினால் 75 வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன், 150 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்