கிழக்கு மாகாண முதலமைச்சர், சுவிட்ஸர்லாந்தின் இலங்கைக்கான தூதுவரிடையே சந்திப்பு

கிழக்கு மாகாண முதலமைச்சர், சுவிட்ஸர்லாந்தின் இலங்கைக்கான தூதுவரிடையே சந்திப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Jun, 2016 | 8:41 pm

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் சுவிட்ஸர்லாந்தின் இலங்கைக்கான தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெற்றது.

இந்த சந்திப்பு திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், சம்பூர் மீள்குடியேற்றம் தொடர்பில் சுவிஸர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் ஹெய்ன்ஸ் வால்கர் நெதர்கூனிடம் (‍ Heinz Walker Nederkoorn) தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணியும் கலந்துகொண்டிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்