ஒலிவாங்கிகள் செயலிழந்தமைக்கு சதித்திட்டம் காரணமில்லை – சபாநாயகர்

ஒலிவாங்கிகள் செயலிழந்தமைக்கு சதித்திட்டம் காரணமில்லை – சபாநாயகர்

ஒலிவாங்கிகள் செயலிழந்தமைக்கு சதித்திட்டம் காரணமில்லை – சபாநாயகர்

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2016 | 12:08 pm

சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்றைய தினம் விசேட உரையாற்றினார்.

இதன்போது நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் முழுமையாக ஆராயப்பட்டது, அதில் எந்த சதித்திட்டங்களும் இடம்பெறவில்லை அத்துடன் இவ்வாறு இடம்பெறுவது முதல்தடவையல்ல, 2002,2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளிலும் இவ்வாறு இடம்பெற்றிருந்தது என சபாநாயகர் தெரிவித்தார்.

மேலும் 15 வருடம் பழமையான தொழில்நுட்ப கட்டமைப்பே பாராளுமன்றத்தில் காணப்படுவதாகவும், 2011 ஆம் ஆண்டிலிருந்து இது தொடர்பில் வலிறுயுறுத்தப்பட்டு வருவதாகவும் தற்போது இதற்கு விலை மனு கோருவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்