உலக சமாதான சுட்டியில் இலங்கை 97 ஆவது இடத்திற்கு முன்னேற்றம்

உலக சமாதான சுட்டியில் இலங்கை 97 ஆவது இடத்திற்கு முன்னேற்றம்

உலக சமாதான சுட்டியில் இலங்கை 97 ஆவது இடத்திற்கு முன்னேற்றம்

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2016 | 11:51 am

2016 ஆம் ஆண்டுக்கான உலக சமாதான சுட்டியில் இலங்கை 97 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கடந்த வருடம் இந்த சுட்டியில் இலங்கை 115 ஆவது இடத்தை பெற்றிருந்ததுடன் அதற்கு முன்னர் 104 ஆவது இடத்தை பெற்றிருந்தது.

அதனடிப்படையில் இலங்கை 18 இடங்கள் முன்னேறியுள்ளமை விசேட அம்சமாகும்.

சிட்னி மற்றும் நியூயோர்க் நகரங்களை மையமாக கொண்ட சமாதானம் மற்றும் பொருளாதாரத்திற்கான நிறுவனம், 163 நாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த அறிக்கையை வருடாந்தம் வெளியிடுகின்றது.

இம்முறையும் உலகின் அமைதியான நாடாக ஐஸ்லாந்து தெரிவாகியுள்ளது.

உலக சமாதான சுட்டியில் இம்முறையும் சிரியாவுக்கு இறுதியிடமே கிடைத்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் பூட்டானுக்கு 13 ஆவது இடமும் நேபாளத்திற்கு 78 ஆவது இடமும் பங்களாதேஷுக்கு 83 ஆவது இடமும் இந்தியாவுக்கு 141 ஆவது இடமும் பாகிஸ்தானுக்கு 153 ஆவது இடமும் கிடைத்துள்ளன.

சுட்டியில் ஆப்கானிஸ்தான் 160 ஆவது இடத்தில் உள்ளது.

SL


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்