இராணுவத் தாக்குதலால் சிரியாவில் 15 பேர் பலி

இராணுவத் தாக்குதலால் சிரியாவில் 15 பேர் பலி

இராணுவத் தாக்குதலால் சிரியாவில் 15 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

09 Jun, 2016 | 3:18 pm

சிரியாவின் அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அரசுப் படையினர் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

அல்-பயான் பகுதி மருத்துவமனை அருகே இராணுவம் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

அல்-மர்ஜா என்ற பகுதியில் வீசப்பட்ட வெடிகுண்டுகளுக்கு 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர்.

அல்-மாதி பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்