பாராளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தசநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

பாராளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தசநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

எழுத்தாளர் Bella Dalima

08 Jun, 2016 | 7:42 pm

பாராளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தசநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று சபாநாயகரிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணையில் 32 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தின் கௌரவம் மற்றும் மீயுயர் தன்மையைப் பாதுகாப்பதற்காக பாராளுமன்ற பொதுச்செயலாளரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்ட பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 5 ஆம் திகதி நிதி சட்டமூலமொன்று தொடர்பான வாக்கெடுப்பின் போது ஏற்பட்ட மோதலொன்றே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டமைக்கான காரணமாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்