குமார் குணரட்னத்தை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்து சேகரிப்பு

குமார் குணரட்னத்தை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்து சேகரிப்பு

குமார் குணரட்னத்தை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்து சேகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

07 Jun, 2016 | 5:47 pm

முன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியற்குழு உறுப்பினரான குமார் குணரட்னத்தை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்று பொதுமக்களின் கையெழுத்துக்கள் பதிவு செய்யப்பட்டன.

முன்னிலை சோஷலிசக் கட்சியின் ஏற்பாட்டில், யாழ். பஸ் நிலையத்திற்கு முன்பாக பொதுமக்களின் கையெழுத்துக்கள் பதிவுசெய்யப்பட்டன.

குமார் குணரட்னத்தினை விடுதலை செய்யுமாறும் அவரின் குடியுரிமையை வழங்குமாறும் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி கேகாலை நீதவான் நீதிமன்றத்தினால் குமார் குணரட்னத்திற்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் 50,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

இலங்கையின் குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த வருடத்தின் நவம்பர் மாதம் முதலாம் திகதி குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்