பசில் ராஜபக்ஸ பிணையில் விடுதலை

பசில் ராஜபக்ஸ பிணையில் விடுதலை

பசில் ராஜபக்ஸ பிணையில் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

06 Jun, 2016 | 4:43 pm

பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ பிணையில் செல்வதற்கு பூகொட நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

ஒரு இலட்சம் ரூபா ரொக்கப்பணம் மற்றும் 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதனை தவிர இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை ஞாயிற்றுக்கிழமைகளில் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் பூகொடநீதவான் நீதிமன்றம் பெசில் ராஜபக்ஸவிற்கு உத்தரவிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்