புனித ரமழான் மாதம் இன்றிலிருந்து ஆரம்பம்

புனித ரமழான் மாதம் இன்றிலிருந்து ஆரம்பம்

புனித ரமழான் மாதம் இன்றிலிருந்து ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

06 Jun, 2016 | 9:01 pm

நாட்டின் சில பகுதிகளில் தலைபிறை தென்பட்டுள்ளமையினால் இன்றிலிருந்து புனித ரமழான் மாதம் ஆரம்பமாகுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறை குழு கூடிய போது ரமழான் மாதம் தலைப் பிறை தென்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்ததாக பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாட்டில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா உறுப்பினர்களும், முஸ்லிம் சமய கலாசார பிரதிநிதிகளும், உலமாக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அதன் படி ஹிஜ்ரி 1437 ஆம் ஆண்டுக்கான ரமழான் மாதம் இன்று ஆரம்பமாகியுள்ளதுடன் முஸ்லிங்கள் தொடர்ந்து ஒருமாதத்திற்கு நோன்பு நோற்கவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்