வௌ்ளவத்தையில் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் கைது

வௌ்ளவத்தையில் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் கைது

வௌ்ளவத்தையில் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் கைது

எழுத்தாளர் Staff Writer

03 Jun, 2016 | 7:22 am

வௌ்ளவத்தை பகுதியில் வீடுகளுக்கு சென்று வீட்டில் உள்ள பெண்களை அச்சுறுத்தி நகைத் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வீடுகளுக்கு சென்று கூரிய ஆயுதத்தை காட்டி பெண்களை அச்சுறுத்தி அவர்களின் தங்கச் சங்கிலிகளை அபகரித்து வந்த பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பெண் தொடர்பில் தமக்கு மூன்று முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதா பொலிஸார் கூறினர்.

மாளிகாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட பெண் ஒருவரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்