வெட் வரியினால் நீர் கட்டணத்தில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது – ரவூப் ஹக்கீம்

வெட் வரியினால் நீர் கட்டணத்தில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது – ரவூப் ஹக்கீம்

எழுத்தாளர் Bella Dalima

03 Jun, 2016 | 8:18 pm

தற்போதைய நீர் கட்டணத்துடன் வெட் வரி சேர்க்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கண்டி – கட்டுகஸ்தோட்டை கிளையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பின்வருமாறு பதிலளித்தார்,

[quote]அதிகரிக்கப்பட்ட வெட் வரியை நீக்குமாறு கோரி திறைசேரி எமக்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. நீர் கட்டணத்துடன் வெட் வரி சேர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே திறைசேரியுள்ளது. அதனால் நாம் எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை. எனினும், ஒரு விடயத்தைத் தெளிவாகக் கூற வேண்டும். நான்கு வருடங்களாக நாம் கட்டணத்தில் எவ்விதத் திருத்தங்களையும் மேற்கொள்ளவில்லை. அதன் ஊடாக நுகர்வோருக்கு பயன் கிட்டியுள்ளது. அதனால் ஓரளவு வெட் வரி அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் பிரச்சினை இல்லை என்றே எனக்குத் தோன்றுகின்றது. வெட் வரியினால் நீர் கட்டணத்தில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை நாம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளோம்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்