தெவிநுவர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு மூவர் காயம்

தெவிநுவர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு மூவர் காயம்

தெவிநுவர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு மூவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

03 Jun, 2016 | 7:36 am

தெவிநுவர பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெவிநுவர கிரலவல்ல பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று மோதி நேற்று (02) மாலை இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பின்னால் வந்த ஜீப் வண்டிக்கு முச்சக்கர வண்டி இடம் வழங்க முற்பட்ட வேளையில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் கபுஹம பிரதேசத்தை சேர்ந்த 49 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்