தனியார் பிரிவு, விவசாயம், அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளுக்குள் பல்வேறு பிரச்சினைகள் – ஜனாதிபதி

தனியார் பிரிவு, விவசாயம், அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளுக்குள் பல்வேறு பிரச்சினைகள் – ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

03 Jun, 2016 | 8:08 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய விவசாய வர்த்தக அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் இன்று முற்பகல் பொலன்னறுவையில் நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தின் விசேட திட்டமாக முன்னெடுக்கப்படும் தேசிய விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், கிராமிய மக்களின் ஜீவனோபாயம் பலப்படுத்தப்படுகின்றது.

இதன்கீழ் பொலன்னறுவையிலுள்ள 1218 விவசாயிகளுக்கு 34 மில்லியன் பெறுமதியான விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஜனாதிபதி பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,

[quote]சந்தை விலை, தரம் ஆகியன கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினைகளாக மாறியுள்ளன. அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் காணப்படும் முறையின் ஊடாகவே தனியார் பிரிவு, விவசாயம் மற்றும் அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளுக்குள் பல்வேறு பிரச்சினைகள் தோன்றுகின்றன. தனியார் பிரிவு மற்றும் விவசாயிகளுக்கு இடையேயான இடைவெளியின் மாற்றமே இதற்குக் காரணம். எனினும், புதிய உலகின் புதிய தொழில்நுட்பம், சர்வதேச சந்தை, சர்வதேச பொருளாதார முறையின் தரம் ஆகியன அனைத்து விடயங்களையும் கருத்திற்கொள்ளும் போது, தற்போது முழு உலகமும் அரச கொள்கைக்கு இணங்கியுள்ளது. நாட்டின் அபிவிருத்திக்கு அரச, அரசசார்பற்ற, தனியார் பிரிவுகளும் மக்களும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒன்றிணைந்து இருக்க வேண்டியது மிக முக்கியமாகும்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்