அனுஷ சமரநாயக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விஜயம்

அனுஷ சமரநாயக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விஜயம்

அனுஷ சமரநாயக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விஜயம்

எழுத்தாளர் Bella Dalima

03 Jun, 2016 | 8:54 pm

ஆட்ட நிர்ணயத்தைத் தூண்டும் செயல்களில் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுநராக செயற்பட்ட அனுஷ சமரநாயக்க இன்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விஜயம் செய்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளை சந்திப்பதற்காகவே அனுஷ சமரநாயக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு சென்றிருந்தார்.

கிரிக்கெட் நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் தம்மை ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட வைக்க தூண்டியதாக இலங்கை அணி வீரர்களான குசல் ஜனித் பெரேராவும், ரங்கன ஹேரத்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இலங்கை விஜயத்தின் போது தெரிவித்திருந்தனர்.

அது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடத்திய விசாரணைகளை அடுத்து கடந்த ஜனவரி 18 ஆம் திகதி அனுஷ சமரநாயக்க, கயான் விஷ்வஜித் ஆகியோரை பணியிலிருந்து இடைநிறுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்