வௌ்ளப்பெருக்கிற்கு சட்டவிரோதக் கட்டிடங்களும் காரணமென மக்கள் தெரிவிப்பு

வௌ்ளப்பெருக்கிற்கு சட்டவிரோதக் கட்டிடங்களும் காரணமென மக்கள் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

31 May, 2016 | 9:47 pm

களனி கங்கை பெருக்கெடுத்தமையினால் கொலன்னாவ மற்றும் அதனை அண்மித்த பகுதி மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கொட்டிகாவத்தை, முல்லேரியா ஆகிய பகுதிகளில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

குறுக்கு வீதிகளிலும், பிரதான வீதிகளும் கழிவுப் பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றன.

இந்நிலையில், மக்கள் மத்தியில் தோல் நோய்கள் பரவி வருவதையும் அவதானிக்க முடிந்தது.

தமது பிரதேசத்தில் காணப்படும் குப்பைகளை அகற்றுமாறு வலியுறுத்தி வெல்லம்பிட்டிய, பொல்கஹபிட்டிய ஆகிய பகுதிகளில் இன்று மக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

நீர் வடிந்தோடுவதற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்மாணங்கள் தொடர்பிலும் வெல்லம்பிட்டிய மற்றும் பொல்கஹபிட்டிய மக்கள் சுட்டிக்காட்டியதுடன் தமது பிரதேசத்தில் வௌ்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு இவ்வாறான சட்டவிரோதக் கட்டிடங்களும் காரணம் என தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்