வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற விசேட திட்டம்

வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற விசேட திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

31 May, 2016 | 10:02 pm

வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற விசேட திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை மீரியாவத்தைக்குச் சென்ற நியூஸ்பெஸ்ட், குப்பைகள் குவிந்துள்ளமையினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தகவல்களை வெளியிட்டது.

கொடிகாவத்தை, வெல்லம்பிட்டிய, பிரண்டியாவத்தை உள்ளிட்ட பல பிரதேசங்களில் பிரதான வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகளில் கழிவுப்பொருட்கள் நிறைந்து காணப்பட்டன.

இதற்குத் தீர்வு காணும் வகையில் அமைச்சர் பைஸர் முஸ்தபா திட்டமொன்றை வகுத்துள்ளதுடன் அவர் இது குறித்து தெளிவுபடுத்தினார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்