விபத்தினால் பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு  35 இலட்சம் ரூபா பெறுமதியான வீடு கையளிப்பு

விபத்தினால் பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு  35 இலட்சம் ரூபா பெறுமதியான வீடு கையளிப்பு

எழுத்தாளர் Bella Dalima

31 May, 2016 | 9:26 pm

விபத்தின் பின்னர் நீண்டகாலமாக சிகிச்சை பெற்றுவந்த மாணவர் ஒருவரின் பெற்றோருக்கு அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பங்களிப்பில் இன்று வீடொன்று வழங்கப்பட்டது.

கொழும்பு ரோயல் கல்லூரியின் மாணவரான சசங்க ஜகத் அல்விஸ் 2013 ஆம் ஆண்டு சாரணர் முகாமொன்றில் அனர்த்தத்திற்குள்ளானார்.

அதன் பின்னர் இவர் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், அவரது குடும்பத்தினர் வசித்துவந்த கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலிருந்த வீடு, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் புனரமைப்புப் பணிகளின்போது அகற்றப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் அவரது தாயார், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சருக்கு அறிவித்ததன் பின்னர், தெமட்டகொட பிரதேசத்தில் 35 இலட்சம் ரூபா பெறுமதியான வீடொன்று வழங்கப்பட்டது.

அலரி மாளிகையில் இன்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்