நோர்வே வெளிவிவகார இராஜாங்க செயலாளர் இலங்கை வருகை

நோர்வே வெளிவிவகார இராஜாங்க செயலாளர் இலங்கை வருகை

நோர்வே வெளிவிவகார இராஜாங்க செயலாளர் இலங்கை வருகை

எழுத்தாளர் Staff Writer

31 May, 2016 | 12:53 pm

நோர்வே வெளிவிவகார இராஜாங்க செயலாளர் டோ ஹட்ரம் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று நாட்டிற்கு வருகைத் தந்துள்ளார்.

நோர்வே வெளிவிவகார இராஜாங்க செயலாளர் டோ ஹட்ரம் மற்றும் சில பிரதிநிதிகள் இன்று காலை 8.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முகாமையாளர் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்கே பேர்னட்இலங்கைக்கு வருகைத் தந்ததன் பிரதிபலனாக வெளிவிவகார இராஜாங்க செயலாளர் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தில் எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் , சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம , நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பாக செயலாளர் அலுவலகத்தின் செயலாளர் மனோ தித்தவெலவையும் சந்தித்த்து கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளை நாட்டிற்கு வருகைத் தந்துள்ள நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க செயலாளர் நாளை (01) வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவையும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்