நிஷங்க சேனாதிபதி, ஜயந்த சமரவீர ஆகியோர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்

நிஷங்க சேனாதிபதி, ஜயந்த சமரவீர ஆகியோர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்

எழுத்தாளர் Bella Dalima

31 May, 2016 | 9:10 pm

அவன்ற் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஸவின் நிறுவனத்திற்கு 22 மில்லியன் ரூபா வழங்கியுள்ளமை தொடர்பில் இதன்போது அவரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அரச வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக செயற்பட்ட காலத்தில் நடந்து கொண்ட விதம் தொடர்பில் இதன்போது விசாரணை செய்யப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்