நாடளாவிய ரீதியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் வேலை நிறுத்தம்: நோயாளர்கள் பெரும் சிரமம்

நாடளாவிய ரீதியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் வேலை நிறுத்தம்: நோயாளர்கள் பெரும் சிரமம்

எழுத்தாளர் Bella Dalima

31 May, 2016 | 9:04 pm

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து வைத்தியர்கள் நாடளாவிய ரீதியில் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனால், வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைகளுக்காக சென்ற நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

சுகாதார சேவையில் நியமனங்களை வழங்கும்போது குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று நண்பகல் 12 மணி முதல் நான்கு மணிநேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது.

நாடளாவிய ரீதியில் 1571 வைத்தியசாலைகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்