சூர்யா பொது இடத்தில் வைத்து இளைஞர்களை தாக்கியதால் பரபரப்பு

சூர்யா பொது இடத்தில் வைத்து இளைஞர்களை தாக்கியதால் பரபரப்பு

சூர்யா பொது இடத்தில் வைத்து இளைஞர்களை தாக்கியதால் பரபரப்பு

எழுத்தாளர் Staff Writer

31 May, 2016 | 11:49 am

நடிகர் சூர்யாவிற்கு எதிராக இரண்டு பேர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். சென்னை அடையாரில் இரண்டு வாலிபர்களை தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இது தொடர்பில் விசாரித்ததில், அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணை இடித்துவிட்டு, வம்பு செய்துள்ளனர்.

அதில் ஒருவர் கால்பந்து வீரர் என கூறப்படுகிறது காரில் இருந்து அதை பார்த்த சூர்யா உடனே சென்று அவர்களை தட்டிகேட்டுள்ளார்.

பொலிஸில் தகவல் சொல்லிவிட்டு, தன் உதவியாளரை அங்கே விட்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு வந்த பொலிஸாரிடம் சூர்யா தங்களை அவர்கள் இருவரும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் அந்த இளைஞர்களில் ஒருவர் சாஸ்திரிநகர் பொலிஸ் நிலையத்தில், பொது இடத்தில் வைத்து தாக்கியதால், தனக்கு அவமானம் ஏற்பட்டு விட்டது அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு நடிகர் சூர்யா தான் காரணம் என்று முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து சூர்யா தெரிவிக்கையில், யாரையும் தான் அடிக்கவில்லை என்றும், அந்த பெண்ணை பிரச்சனையில் இருந்து காப்பாற்ற மட்டுமே தலையிட்டதாக கூறியிருக்கிறார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்