சாவகச்சேரியில் தற்கொலை அங்கி கைப்பற்றப்பட்டமை தொடர்பில் 2 பிள்ளைகளின் தந்தை கைது

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி கைப்பற்றப்பட்டமை தொடர்பில் 2 பிள்ளைகளின் தந்தை கைது

எழுத்தாளர் Bella Dalima

31 May, 2016 | 6:25 pm

அண்மையில் சாவகச்சேரி பகுதியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் இந்த நபர் நேற்று (30) மாலை கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். சாவகச்சேரியில் அண்மையில் தற்கொலை அங்கி உட்பட பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சாவகச்சேரி ஆயுதங்கள் குறித்து விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சட்ட மாஅதிபர் ஆலோசனைக்கமைய சந்தேகநபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்