ஐந்து மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

ஐந்து மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

31 May, 2016 | 11:21 am

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மஸ்கெலியா காட்மோட் தோட்டத்தில் மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக 48 குடும்பங்களைச் சேர்ந்த 217 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

மேலும் மண்சரிவு அபாயம் காரணமாக களுத்துறை தெபுவன மாவடவத்த பகுதி மக்களும் இடம்பெயர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்தோடு மண்சரிவு அபாயம் காரணமாக அகலவத்தை மீகஸ்தென்ன மாவட்ட வைத்தியசாலையின் இரண்டு வாட்டுக்கள் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்