ஊவாபரணகம பகுதியில் உருக்குலைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு

ஊவாபரணகம பகுதியில் உருக்குலைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

31 May, 2016 | 1:53 pm

வெலிமடை ஊவாபரணகமையில் உள்ள தேயிலைத் தோட்டமொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

இன்று (31) காலை கிடைத்த தகவலுக்கமைய இந்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அடையாளங் காண முடியாத வகையில் சிசுவின் சடலம் உருக்குலைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம் தற்போது சம்பவ இடத்திலேயே பொலிஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஊவா பரணகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்