இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

31 May, 2016 | 9:39 am

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னாருக்கு வடமேல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதே இந்திய மீனவர்கள் இன்று (31) அதிகாலை கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி கூறினார்.

அத்துடன் அவர்கள் மீன் பிடிக்கு பயன்படுத்திய ட்ரோலர் படகொன்றும் மீன் பிடி உபகரணங்களும் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்