அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணி பகிஷ்கரிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணி பகிஷ்கரிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணி பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

31 May, 2016 | 9:02 am

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (31) காலை 8 அணி முதல் அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளீர்ப்பு பயிற்சி நடவடிக்கைகளுக்காக மருத்துவர்களுக்கான நியமனங்களை வழங்கும் போது மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தே இந்த பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

தமது கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தாவடின் கடும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்தார்.

அத்துடன் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட கொழும்பு,கம்பஹா மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் நெ்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட மாட்டாது.

அவரச சிகிச்சைப் பிரிவு தொடர்ந்தும் இயங்கவுள்ளதுடன் சிறுவர் வைத்தியசாலைகள் ,சிறுநீரக வைத்தியசாலைகள் மற்றும் பிரசவ விடுதிகளுக்கு இந்த பணி பகிஷ்பரிப்பு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் பிரச்சினை தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களின் நியமனம் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த பணிபகிஷ்கரிப்பு அநீதியாக முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்