அரசியலமைப்பு சீர்திருத்தம்: மக்கள் கருத்தறியும் குழுவின் இறுதி அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

அரசியலமைப்பு சீர்திருத்தம்: மக்கள் கருத்தறியும் குழுவின் இறுதி அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

அரசியலமைப்பு சீர்திருத்தம்: மக்கள் கருத்தறியும் குழுவின் இறுதி அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

31 May, 2016 | 8:35 am

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவின் இறுதி அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (31) கையளிக்கப்படவுள்ளது.

இறுதி அறிக்கையினை நாளை (01) சபாநாயகருக்கும் எதிர்வரும் 07 ஆம் திகதி ஜனாதிபதிக்கும் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க கூறினார்.

சபாநாயகரூடாக அரசியலமைப்புச் சபைக்கு அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையினை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் மக்கள் கருத்தறியும் குழுவினால் நாளை ஊடக சந்திப்பொன்று நடத்தப்பட்டு அதனூடாக அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

அதன் பின்னர் ஆன்மீகத் தலைவர்களுக்கும் இதன் பிரதிகள் வழங்கப்படவுள்ளதாக புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்