வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விசேட சுகாதார வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானம்

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விசேட சுகாதார வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானம்

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விசேட சுகாதார வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

30 May, 2016 | 11:26 am

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் விசேட சுகாதார வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்திற்கு சுமார் 250 பொது சுகாதார பரிசோதகர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலுள்ள 09 பிரிவுகளை சேர்ந்த ஊழியர்கள் இந்த பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த 2 மாவட்டங்களிலுமுள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று நோய் அறிகுறிகள் மற்றும் சுகாதார முன் ஆயத்தங்கள் தொடர்பில் மக்களை தெளிவூட்டுவதுடன் நுளம்பு பெருக்கத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் பொது சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுக்கவுள்ளதாக உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்