வட மத்திய மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

வட மத்திய மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

வட மத்திய மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

30 May, 2016 | 8:27 pm

வட மத்திய மாகாணத்தின் முதலமைச்சர், அமைச்சர்கள், மாகாண ஆளுநர் மற்றும் வட மத்திய மாகாண சபையின் பிரதம செயலாளர், அனைத்து அமைச்சுக்களினதும் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் நாளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வட மத்திய மாகாணத்தின் சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வட மத்திய மாகாணத்தின் சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஆதித்தய காந்த மத்தும முன்னிலையில் வாதியினால் முன்வைக்கப்பட்ட மனுவொன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் வட மத்திய மாகாண சபையின் விலைமனுக் கோரலின் விதிமுறைகளை மீறி அரச கட்டட நிர்மாண ஒப்பந்தங்களை தமது அரசியல் ஆதரவாளர்களுக்கு முறையற்ற வகையில் வழங்கி அரசின் நிதியை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தி முன்வைக்கப்பட்டுள்ள மனுவை ஆராய்ந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை நீதிமன்ற அதிகாரியொருவர் மூலமாக இன்று உடனடியாக பிரதிவாதிகளுக்கு கையளிக்குமாறு நீதிமன்ற பதிவாளருக்கு மேல்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்