லசந்த விக்ரமதுங்க கொலை: புலனாய்வு முகாம்களிலுள்ள தகவல்களை CID யிடம் வழங்குமாறு  உத்தரவு

லசந்த விக்ரமதுங்க கொலை: புலனாய்வு முகாம்களிலுள்ள தகவல்களை CID யிடம் வழங்குமாறு  உத்தரவு

லசந்த விக்ரமதுங்க கொலை: புலனாய்வு முகாம்களிலுள்ள தகவல்களை CID யிடம் வழங்குமாறு  உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

30 May, 2016 | 12:04 pm

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு, இராணுவ புலனாய்வு முகாம்களிலுள்ள அனைத்து தகவல்களையும், ஆவணங்களையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் வழங்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் இராணுவ தளபதிக்கு உத்தரவிட்டுள்ளது.

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று மீண்டும் இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையை ஆராய்ந்த கல்கிஸ்ஸ நீதவான் மொஹமட் சஹாப்தீன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு இதற்கு முன்னரும் நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும்,அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்களம், இன்று (30) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி அத்திடிய மலகலகே ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]t.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்