புத்திக பத்திரணவின் தந்தை எம்.எஸ்.டீ பத்திரன காலமானார்

புத்திக பத்திரணவின் தந்தை எம்.எஸ்.டீ பத்திரன காலமானார்

புத்திக பத்திரணவின் தந்தை எம்.எஸ்.டீ பத்திரன காலமானார்

எழுத்தாளர் Staff Writer

30 May, 2016 | 3:37 pm

முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.டீ பத்திரன காலமானார்.

இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரணவின் தந்தையுமாவார்.

1932 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 9 ஆம் திகதி பிறந்த அன்னார், பேராதெனிய பல்கலைக்கழகத்தில் ஆரம்ப பட்டப்படிப்பை நிறைவுசெய்துள்ளதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுகலைமானி பட்டப்படிப்பையும் பூர்த்திசெய்துள்ளார்.

நோய்வாய்ப்பட்டிருந்த எம்.எஸ்.டீ பத்திரன இன்று நண்பகல் மாத்தறை பொது வைத்தியசாலையில் காலமானார்.

அன்னாரின் பூதவுடல் இலக்கம் 99. இராகுல வீதி மாத்தறையில் அமைந்துள்ள அவரது வீட்டில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்