பாதுகாப்பான இருப்பிடங்களை கோரும் புலத்கொஹூபிடிய களுபஹன மக்கள்

பாதுகாப்பான இருப்பிடங்களை கோரும் புலத்கொஹூபிடிய களுபஹன மக்கள்

பாதுகாப்பான இருப்பிடங்களை கோரும் புலத்கொஹூபிடிய களுபஹன மக்கள்

எழுத்தாளர் Staff Writer

30 May, 2016 | 8:07 pm

இயற்கையின் சீற்றம் மண்சரிவு வடிவில் தமது உறவுகளை மண்ணோடு மண்ணாக அள்ளிச் சென்று இரண்டு வாரங்களே கடந்துள்ள நிலையில் மீண்டும் அதே இடங்களுக்கு மீளச் செல்ல வேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாக புலத்கொஹூபிடிய களுபஹன தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது அமைதியாக காட்சியளிக்கும் தோட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மண்சரிவு வடிவில் இயற்கையின் சீற்றம் கோரத்ததாண்டவம் ஆடியது.

ஒன்றுமறியா இந்த மழலைகளின் விழிகளில் அச்சத்தை ஏற்படுத்தியது.

தமது உறவுகளை கண்முன்னே தொலைத்து நிர்க்கதிக்கதிக்குள்ளான களுபஹன தோட்ட மக்கள் உறங்க இடம், பசியாற உணவு எதுவுமற்று நிலையில் தற்காலிகமாக புலத்ஹோஹூபிடிய யக்கல சீலானந்த மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

இரண்டு வாரங்கள் பாடசாலையில் தங்க வைக்கப்ட்ட இந்த மக்கள் இன்று மீண்டும் தமது இருப்பிடங்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மண்சரிவு அபாயம் ஏற்படும் பகுதி என தெரிவித்தே தாம் இருப்பிடங்களை விட்டு வௌியேற்றப்பட்டதாக தெரிவிக்கும் இந்த மக்கள் தமது உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில் மீண்டும் அதே இடங்களுக்கு அனுப்பியுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

மழையினால் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளதுடன் வாழ்வதற்கு ஏற்றாற்போல் அவை இல்லையெனவும் இந்த மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அனைத்தையும் இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ள தமக்கு பாதுகாப்பான இருப்பிடங்களே இவர்களின் கோரிக்கையாகவுள்ளது.

மண்ணிற்குள் புதையுண்ட தமது உறவுகள் மீண்டும் வரப்போவதில்லை என்றாலும் மீண்டும் அவ்வாறான நிலைமை ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்