படகுகளை எதிர்ப்பார்த்திருந்தவர்கள் தற்போது குப்பை ஏற்றிச் செல்லும் வண்டிகளுக்காக காத்திருக்கும் அவலம்

எழுத்தாளர் Staff Writer

30 May, 2016 | 8:12 pm

களனி கங்கை பெருக்கெடுத்தமையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுள் கொலன்னாவை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் குறிப்பிடத்தக்க பிரதேசங்களாகும்.

நீர் வடிந்தோடியதன் பின்னர் தற்போது அந்த பகுதி மக்களின் வாழ்க்கை தொடர்பில் நியூஸ்பெஸ்ட் ஆராய்ந்தது.

கொட்டிக்காவத்தை மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளுக்கு நியூஸ் பெஸ்ட் குழுவினர் இன்று சென்ற போது வீதியின் இரு மருங்கிலும் குப்பை கூளங்களை நிரம்பியருக்கும் காட்சிகளையே காணக்கிடைத்தன.

கடந்த வாரம் தமது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள படகுகளை எதிர்ப்பார்த்திருந்தவர்கள் தற்போது குப்பைகளை அள்ளிச் செல்லும் குப்பை ஏற்றிச் செல்லும் வண்டிகளுக்காக காத்திருக்கின்றனர்.

இந்த குப்பைகள் அகற்றப்படாவிடின் தமது உயிர்கள் டெங்கு நுளம்புகளுக்கு இரையாகும் என அஞ்சுகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்