சீனாவில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க விரைவில் “Land Airbus” அறிமுகம் (Video)

சீனாவில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க விரைவில் “Land Airbus” அறிமுகம் (Video)

சீனாவில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க விரைவில் “Land Airbus” அறிமுகம் (Video)

எழுத்தாளர் Staff Writer

30 May, 2016 | 5:04 pm

சீனாவில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க விரைவில் “Land Airbus” இனை பாவனையில் ஈடுபடுத்த அந்நாட்டு போக்குவரத்து முடிவு செய்துள்ளது.

சீனாவில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் “Land Airbus” என்ற பேருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் சுமார் 1,400 பேர் பயணம் செய்யலாம்.

புதிய அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த பேருந்தின் முழு வடிவம் வரும் ஓகஸ்ட் மாதம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த “Land Airbus” சீனாவை சேர்ந்த 2 நிறுவனங்கள் இந்த பஸ்ஸை உருவாக்குகின்றன. இதற்கான முதல் யூனிட் தற்போது கட்டப்பட்டு வருகிறது. இந்த “Land Airbus” மணிக்கு 37 கிலோமீட்டர் வரை செல்லும்.

இந்த பஸ் செல்லும் போது பெரிய பேருந்துகள் மற்றும் லொரிகள் செல்ல இயலாது ஆனால் கார் மட்டும் இந்த பேருந்தின் அடியில் செல்லும் வைகையில் உருவாக்கப்படுகிறது. பேருந்தின் சோதனை ஓட்டம் அடுத்த ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் உள்ள நகர்புறங்களில் கனரக வாகங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்