சம்பூரில் ஒன்றரை வயது குழந்தை கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு

சம்பூரில் ஒன்றரை வயது குழந்தை கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு

சம்பூரில் ஒன்றரை வயது குழந்தை கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

30 May, 2016 | 8:33 am

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் தங்கபுரம் பகுதியில் ஒன்றரை வயது குழந்தையொன்று கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று (30) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆண் குழந்தையொன்றின் சடலமே கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சடலம் தற்போது தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகைளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்