கண்டி, ஹந்தான மலைத்தொடரில் மண்சரிவு ஏற்படும் அபாயம்

கண்டி, ஹந்தான மலைத்தொடரில் மண்சரிவு ஏற்படும் அபாயம்

கண்டி, ஹந்தான மலைத்தொடரில் மண்சரிவு ஏற்படும் அபாயம்

எழுத்தாளர் Staff Writer

30 May, 2016 | 12:20 pm

கண்டி ஹந்தான மலைத்தொடரின் ஒரு பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக, ஹந்தான மலைத்தொடரின் பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஹந்தான மலைத்தொடரின் கிழக்கு சரிவில் கண்டியிலிருந்து உடுவெல செல்லும் வீதியில் 4 ஆம் கட்டை பகுதியில மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் செயலாளர் அமித் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் சுமார் 72 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வாழ்ந்துவருகின்றனர்.

இருப்பிடங்களைவிட்டு வெளியேறி முகாம்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாகவும் எனினும் தங்களின் உடமைகளை விட்டு செல்ல முடியாது எனவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தங்களுக்கு பாதுகாப்பான ஒரு இடத்தை பெற்றுத்தருமாறு கண்டியிலிருந்து உடுவெல செல்லும் வீதியில் 4 ஆம் கட்டை பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்