ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

எழுத்தாளர் Staff Writer

29 May, 2016 | 10:08 am

மழையுடனான வானிலை தொடருமானால் சில பகுதிகளில் மண்சரிவு அபயாம் எச்சரிக்கை விடுக்கப்படும் என இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய இன்று (29) பிற்பகல் 2 மணி வரை ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள் மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்படலாம் என நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலில் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை அமுலிலில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் சந்தர்ப்பத்தில், மண்சரிவு மற்றும் கற்பாறை சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் மண்சரிவு மற்றும் இடர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர.எம்.எஸ் பண்டார தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மக்கள் , அனைத்து சந்தரப்பங்களிலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலவும் மழையால் பிரதான ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய கிங் கங்கை , அத்தனகல கங்கை உள்ளிட்ட பிரதான ஆறுகளை அண்மித்த பகுதிகளில் வாழ்வோர் அவதானத்துடன் செயற்படுமாறும் இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் பெய்த பலத்த மழைக் காரணமாக விவசாய நிலங்களும் , குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

தம்பலகாமம் பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்யும் பட்சத்தில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப நேரிடும் என பிரதேச செயலாளர் குறிப்பிட்டுள்ளதாகவுவம் அவர் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்