மண்சரிவால் ​வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு  காணி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

மண்சரிவால் ​வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு காணி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

மண்சரிவால் ​வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு காணி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

29 May, 2016 | 9:28 am

மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயத்தால் ​வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு 1700 ஏக்கர் காணியை பெற்றுக் கொடுப்பதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

49,000 இலட்சம் ரூபா நிதியும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு பகிரப்படவுள்ளதாக காணி இராஜாங்க அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக 20 பேர்ச்சஸ்களுக்கு உட்பட்டதாக காணியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பகிர்ந்தளிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பான தகவல்களை திரட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய இரத்தினப்புரி, கண்டி, மாத்தளை, கேகாலை, களுத்துறை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் காணிகள் பகிர்ந்தளிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரி.பி ஏக்கநாயக்க கூறியுள்ளார்.

காணி ஆணையாளர்நாயகம் திணைக்களத்துடன் இணைந்து, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய வகையில் பாதுகாப்பான இடங்களை வழங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இடர் முகாமைத்துவ நிலையம் , தேசிய கட்டட ஆய்வு நிலையம் மற்றும் புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் உதவியையும் கோரியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பான காணியை உறுதிப்படுத்தி அதனை மக்களுக்கு கையளிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும் எனவும் காணி இராஜாங்க அமைச்சர் ரி.பி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்