இலங்கையின் அபிவிருத்திக்காக ஜப்பான் பெருந்தொகை நிதியை ஒதுக்கியுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவிப்பு

இலங்கையின் அபிவிருத்திக்காக ஜப்பான் பெருந்தொகை நிதியை ஒதுக்கியுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவிப்பு

இலங்கையின் அபிவிருத்திக்காக ஜப்பான் பெருந்தொகை நிதியை ஒதுக்கியுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 May, 2016 | 1:19 pm

இலங்கையின் அபிவிருத்திக்காக நிதி உதவி மற்றும் முதலீடாக பெருந்தொகை நிதியை ஜப்பான் ஒதுக்கியுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன இன்று (28) காலை ஜப்பான் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பின்போது இலங்கைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி தொடர்பில் ஜப்பான் பிரதமர் உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜீ-7 மாநாடு நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கமைய ஜப்பான் 600 பில்லியன் ரூபாய்களை இலங்கைக்காக ஒதுக்கீடு செய்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்