வரி ஏய்ப்பு மோசடி குறித்து கூகுள் நிறுவனத்தில் சோதனை

வரி ஏய்ப்பு மோசடி குறித்து கூகுள் நிறுவனத்தில் சோதனை

வரி ஏய்ப்பு மோசடி குறித்து கூகுள் நிறுவனத்தில் சோதனை

எழுத்தாளர் Staff Writer

25 May, 2016 | 6:07 am

அமெரிக்காவின் முன்னணி இணையத்தள நிறுவனமான கூகுள் தலைமையகத்தில் வரி ஏய்ப்பு மோசடி தொடர்பான வழக்கு விசாரணை குறித்து பிரான்ஸ் அதிகாரிகளால் நேற்றைய தினம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மத்திய பரீஸில் இருந்த கூகுள் தலைமை அலுவலகத்திற்குள் நேற்றையதினம் சுமார் 100 வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்தனர்.

பிரான்ஸ் அரசாங்கத்துக்கு கூகுள் நிறுவனம் சுமார் 1.8 பில்லியன் டொலர்கள் வரி செலுத்தப்படாதுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை கூகுள் நிறுவனத்தின் கட்டமைப்பானது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஆகியவற்றினால் விதிக்கப்படும் வரித்தொகையை செலுத்தாது விடுவதற்கு ஏதுவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்