வெள்ளமேற்பட்ட பிரதேசங்களில் இடம்பெறும் திருட்டு தொடர்பில் தகவல் வழங்குமாறு அறிவிப்பு

வெள்ளமேற்பட்ட பிரதேசங்களில் இடம்பெறும் திருட்டு தொடர்பில் தகவல் வழங்குமாறு அறிவிப்பு

வெள்ளமேற்பட்ட பிரதேசங்களில் இடம்பெறும் திருட்டு தொடர்பில் தகவல் வழங்குமாறு அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 May, 2016 | 7:46 am

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள வீடுகளில் திருட்டு சம்பங்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் வழங்குமாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

முல்லேரியா, வெல்லம்பிட்டி மற்றும் கொலன்னாவ ஆகிய பிரதேசங்களில் வீடுகளில் கொள்ளையிட்ட திருடர்கள் சிலரை கைது செய்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளின் பாதுகாப்பிற்கா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பிலான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் 011 258 0 518 என்ற தொலைபேசி இலக்கத்தன் ஊடாக தகவல்களை வழங்குமாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பொது மக்களை கேட்டுகொண்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்