யாழ். நகர அபிவிருத்தி: ஆளுனர் தலைமையில் கலந்துரையாடல், முதல்வர் பங்கேற்கவில்லை

யாழ். நகர அபிவிருத்தி: ஆளுனர் தலைமையில் கலந்துரையாடல், முதல்வர் பங்கேற்கவில்லை

எழுத்தாளர் Bella Dalima

24 May, 2016 | 9:59 pm

யாழ். நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலொன்று வட மாகாண ஆளுனர் அலுவலகத்தில், வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தலைமையில் நடைபெற்றது.

எனினும், வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் மாகாண அமைச்சர்கள் எவரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.சரவணபவன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தன​ர்.

அத்துடன், வட மாகாண சபைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், ஆளும் கட்சி உறுப்பினர்களான எஸ்.சுகிர்தன், இ.ஆர்னல்ட், யூ.அஸ்மின், கே.சயந்தன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

மாகாண சபை எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி எஸ்.அகிலதாஸ் கலந்துகொண்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் 55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்