”பைடர் மேன்” என அழைக்கப்படும் பாலஸ்தீன சிறுவன் (Photos & Video)

”பைடர் மேன்” என அழைக்கப்படும் பாலஸ்தீன சிறுவன் (Photos & Video)

எழுத்தாளர் Bella Dalima

24 May, 2016 | 3:55 pm

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் முகமது அல் ஷேக், தன்னுடைய அசாதாரணமான செயற்பாடுகளால் ”ஸ்பைடர் மேன்” என்று அழைக்கப்படுகிறார்.

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு இவர் தனது உடல் அவயங்களை வளைத்துக் காட்டுகிறார்.

கால் பாதங்களைத் தூக்கித் தோள்களில் வைக்கிறார். உடலைப் பின்பக்கமாக வளைத்து, தலையை முன்னோக்கிக் காட்டுகிறார். இரண்டு கைகளால் நடக்கிறார். ஒரு கையால் நிற்கிறார்.

4 அடி 6 அங்குல உயரமும் 29 கிலோ எடையும் கொண்ட முகமதுக்கு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதே தற்போதைய இலட்சியம்.

முகமதுவின் திறமை லெபனான் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

உடல் வளைப்பு போட்டியில் கலந்துகொண்ட முகமதுக்கு 1.4 கோடி வாக்குகள் கிடைக்கப்பெற்றன.

தனித்துவம் மிக்க 4 உடல் அசைவுகளை, இவர் போலச் செய்வதற்கு இந்த உலகில் யாரும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

தன்னுடைய திறமைகளை கின்னஸ் சாதனைப் புத்தகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளார் முகமது.

347C455E00000578-0-image-a-84_1463918214809  347C470E00000578-0-image-a-72_1463918191636 347C450200000578-0-image-a-76_1463918200005 347C467500000578-0-image-a-98_1463918253117 347C474700000578-0-image-a-74_1463918195879 36384375 230868822 311574574 337313713

347C463F00000578-0-Despite_the_50_day_war_in_2014_he_appeared_on_the_TV_show_Arabs_-a-119_1463919625695


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்