நடிகர் ஜெக்ஸன் அந்தனி பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்

நடிகர் ஜெக்ஸன் அந்தனி பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்

நடிகர் ஜெக்ஸன் அந்தனி பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

24 May, 2016 | 2:01 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தொடர்பாடல் செயலாளர் மற்றும் ராஜபக்ஸ மன்றத்தின் உறுப்பினர் உபுல் செனவிரத்தன பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜபக்ஸ மன்றத்துக்கு உரித்தானதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் கம்பஹா அலுவவலகம் அமைந்துள்ள காணியை கொள்வனவு செய்தமை மற்றும் அவற்றுக்கு பணம் ஈட்டிய முறைமை தொடர்பில் வெளிப்படுத்த முடியாமல் போனதையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உயர் அதிகாரியொருவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சின் செயலாளர் விலீ கமகே மற்றும் ராஜபக்ஸ மன்றத்தில் பொருளாளர் ஆரியதிலக தஹநாயக்க ஆகியோர் நேற்று (23) நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை சிங்கள சினிமா நடிகர் ஜெக்ஸன் அந்தனி பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு நீர் நிரப்பும் நிகழ்வின் போது ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார நிகழ்வில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்ளவே ஜெக்ஸன் அந்தனி அழைக்கப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்